சூரியசக்தி மின்னுற்பத்தி பூங்காவினை ஸ்தாபிக்க அனுமதி!

Wednesday, December 21st, 2016

சியபலாண்டுவ பிரதேசத்தில் 100 மெகாவொட் கொள்ளலவைக் கொண்ட சூரியசக்தி மின்னுற்பத்தி பூங்காவினை ஸ்தாபித்தல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

  தற்போது சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யும் நடைமுறை தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்தப்படுகின்றது. இங்கு சூரிய சக்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது.

11.3 மெகாவொட் அளவிலான சூரிய மின்சாரமானது தற்போது இலங்கை மின்சார அமைப்புடன் இணைக்கப்படுகின்றது. இலங்கையில் சூரியசக்தி மின்னுற்பத்தியினை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இதுவரையில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

100 மெகாவொட் அளவினை கொண்ட 03 சூரியசக்தி மின்னுற்பத்தி பூங்காக்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதன் முதற் கட்டமாக சியபலாண்டுவ பிரதேசத்தில் 100 மெகாவொட் கொள்ளலவைக் கொண்ட சூரியசக்தி பூங்காவினை ஸ்தாபிப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை மேற்கொள்வது தொடர்பில் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியபலாப்பிட்டியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

wstq9Prt

Related posts: