யாழ். போதனா வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்!

Saturday, December 3rd, 2016

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது வடமாகாண கடற்படை தளபதி றியல் அட்மிரல் பியல் டி சில்வா கேடந்த வியாழனன்று (01) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீரை அனைவரும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில் ஐனாதிபதியால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இக்குடிநீர் திட்ட இரண்டாம் கட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஐம்பது இலட்சம் பெறுமதியான இத்திட்டத்தை கடற்படையினர் 15 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைத்துள்ளதுடன் நாட்டிலுள்ள அனைத்து கடற்படையினரும் தமது ஒரு நாள் வேதனத்தை இத்திட்டத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

article_1480667459-2

Related posts: