இந்தியா செல்கிறார் பிரதமர் ரணில்!

Tuesday, April 25th, 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.  இவருடன் மலிக் சமரவிக்ரம, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அமைச்சர்களும் பயணிக்கவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ரணில் தனது விஜயத்தின் போது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்தியாவின் முக்கிய அமைச்சர்களையும், அவர் சந்திக்கவுள்ளார்.

Related posts: