யாழ். காரைநகர்ப் பகுதியில் 36 கிலோக் கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!
Saturday, October 15th, 2016
யாழ். காரைநகர்ப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் 36 கிலோக் கிராம் கஞ்சாவுடன் இந்தியப் பிரஜை உட்பட மூன்று பேரை இன்று சனிக்கிழமை(15) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் காரைநகரைச் சேர்ந்தவர்களெனவும், மற்றைய நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வருகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் விசேட அதிரடிப்படையினர் ஊர்காவற்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். .
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணையின் பின் சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts:
செக்.குடியரசின் ஜனாதிபதி இலங்கை விஜயம்!
கோத்தபாய ராஜபக்சவிற்கே ஆதரவு: அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!
அனைத்து பகுதிகளும் பேதங்களின்றி அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்க...
|
|
|


