மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் கைக்கலப்பு – அரியாலையில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயம்!

Tuesday, July 6th, 2021

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை மணல் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

அரியாலை கிழக்கு பகுதியில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் –

குறித்த பகுதியில் மணல் கொள்ளையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் விரைந்துள்ளனர்.  

அங்கு மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்ய முற்பட்ட போது, கொள்ளையர்கள் அவர்கள் மீது மணல் அள்ளுவதற்கு வைத்திருந்த உபகாரணங்களால் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் அதிரடி படையினர் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை தப்பி சென்றவர்களில் இருவரை துரத்தி மடக்கி பிடித்து அதிரடி படையினர் கைது செய்திருந்தனர்.

காயமடைந்த அதிரடி படையினர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட இருவரையும், மணல் கொள்ளை நடைபெற்ற இடத்தில் மீட்கப்பட்ட உழவு இயந்திரம் ஒன்றையும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பி சென்ற ஏனையவர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைகளையும்  மேற்கொண்டுள்ளனர்.

Related posts:

தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடங்கள் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப...
இலங்கை அரசின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவே நானோ நைட்டிரஜன் உரத்தை இந்திய வழங்கியுள...
நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ...

குடாநாட்டு விவசாயிகளுக்கு 30 வீதமானமுதலீட்டுடன் வெங்காயம், மிளகாய்விதை உற்பத்திகளுக்கு நிதி ஒதுக்கீ...
கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென - சிரேஷே்ட பேராசிரியர் அர்ஜூன...
யாழ் சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் நலன் தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை!