அனைத்து பகுதிகளும் பேதங்களின்றி அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் – நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Saturday, April 10th, 2021

இலங்கைத் தீவின் அனைத்து பிரதேசங்களையும் சமமான வகையில் ஏற்றத் தாழ்வின்றி அபிவிருத்தியால் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு சமுர்தி விற்பனைச் சந்தை வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தியினால் திறந்துவைக்கப்பட்டது. வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போதைய அரசாங்கத்தின் தூர நோக்கான சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவுக்கு அமைவாக நாடு முழுவதும் அதிகளவில் அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அத்தகைய சிறப்புமிக்க பணியை ஏற்றுக்கொள்ள முடியாத தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

ஆனாலும் அரசை அவ்வாறு விமர்சிப்பவர்கள் தமக்கான தேவைகளை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டும் வருகின்றனர்.

அந்தவகையில் இந்த அரசாங்கம் எவரையும் புறந்தள்ளவோ பழிவாங்கலுக்குள்ளாக்கவோ மாட்டாது. அரசால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் பாகுபாடுகளுக்கு அப்பால்ஆனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்ற ரீதியிலேயே அனைத்து மக்களுக்கும் அனைத்து பாகங்களுக்கும் சமமான வகையில் வழங்கப்பட்ட்ட வருகின்றன.

சிலர் கூறுவது போன்று அம்பாந்தோட்டைக்கு ஓர் அபிவிருத்தியையும் வன்னி மாவட்டத்திற்கு இன்னோர் அபிவிருத்தியையும் இந்த அரசு ஒருபொதும் மேற்கொள்ளாது. அனைத்து பிரதேசங்களையும் உள்வாங்கி அனைத்த மக்களும் அபிவிருத்தி காணவேண்டும் என்ற நோக்குடனேயே ஒவ்வொரு அபிவிருத்தியையும் எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி பொருட்களை ஒரே இடத்தில் மலிவுவிலையில் பெற்றுக்கொள்ளும்படியாக சமுர்த்தி பயனாளர்களினால் குறித்த விற்பனை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு,விற்பனை செய்யப்பட்டு வதற்காக திறந்துவைக்கப்பட்ட இந்த நிகழ்வில் .சிறப்ப அதிதிகளாக வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் துஸ்யந்திமாலா, மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், சமுர்த்திபயனாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.

Related posts:


மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளிநாடு பயணம் திட்டமிடப்பட்ட செயல் - கபே அமைப்பு குற்றச்சாட்டு!
பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு ...
யாழ் - மாவட்டத்தில் டெங்கு தொற்று அதிகரிப்பு – பொதுமக்கள் நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச் சூழலை பா...