யாழ் – மாவட்டத்தில் டெங்கு தொற்று அதிகரிப்பு – பொதுமக்கள் நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து!.

Tuesday, December 26th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சுற்றுசுழலை நுளம்புகள் பரவாத வகையில் பாதுகாக்க வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் த.சத்தியமூர்த்தி கோரியுள்ளார்.

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 945 பேர் டெங்கு நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் மாத்திரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், டெங்கு நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 40 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்று தொடர்பிலும் பொதுமக்கள் தங்களது உடல்நிலை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

யாழ்ப்பாணம், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே டெங்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுமாயின் பொதுமக்களை வைத்தியசாலையை நாடுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 11 மாத குழந்தையொன்று டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: