பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்யப்பட வேண்டும் – ஒழுங்குமுறை சபை அதிரடி உத்தரவு!

Monday, July 3rd, 2023

பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒழுங்குமுறை சபை  அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தனியார் மருத்துவ நிறுவனங்களின் பதிவுச் சட்டத்தின் விதிகளின்படி, இலங்கையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்து உரிய பதிவை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு பதிவு செய்யாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராகவும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி (01) வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஒழுங்குமுறை சபை தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் பதிவு செய்யப்படாத சுமார் 1,500 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஆரம்ப கல்வியை மேம்படுத்த 50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்த...
சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் - ஐ.நா உணவு ம...
ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வ...