யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு !

Tuesday, June 5th, 2018

நாட்டின் காலநிலை மோசமடைந்ததால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால ஒத்திவைக்கப்பட்டிருந்த உளச்சார்பு பரீட்சை எதிர்வரும் 09.06.2018 (சனிக்கிழமை) அன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக் கலைக்கழகங்களில் நடைபெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்ட பரீட்சை நிலையம் மற்றும் சுட்டெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: