யாழில் 250 மில்லியன் செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா!

Friday, February 22nd, 2019

யாழ்ப்பாணத்தில் விருத்திக்கான தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் அலரிமாளிகையில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசையில் இத்திட்டமும் ஒன்றாகும்.

இந்த பூங்கா வடமாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசினால் அபிவிருத்தி மற்றும் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றத்தினை மேம்படுத்தும் முகமாக வடமாகாணத்தில் 46 000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts: