இளைஞர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுவது நிலைமையின் பாரதூரதன்மையை காண்பிக்கின்றது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Wednesday, April 28th, 2021

கொவிட் நோயாளர்களிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பிவிட்டன என தெரிவித்துள்ள பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் நோயாளர்களிற்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளிற்கு நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் இந்த மருத்துவமனைகள் வழங்ககூடிய சிகிச்சையின் அளவை எட்டிவிட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையும் ஹோமஹம மருத்துவமனையும் பெருமளவு நோயாளர்களின் சுமையை சுமக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய நோயாளர்களிற்கும் சிகிச்சை முடிவடைந்து செல்லும் நோயார்களிற்கும் இடையில் சமநிலையை பேணமுடியுமானால் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ள அசேலகுணவர்த்தன நாட்டில் தற்போது பரவும் வைரசிற்கு ஆபத்தான புதிய கொரோனா வைரசே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முன்னைய கொரோனாவைரஸ் பாதிப்பின்போது 95 வீதமான நோயாளிகள் சிறிதளவு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தினார்கள் என தெரிவித்துள்ள பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய வைரஸ் காரணமாக மருத்துவமனையில் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் காணமுடிகின்றது இது நிலைமையின் பாரதூரதன்மையை காண்பிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அனைத்து சுற்றறிக்கைகளும் இரத்து - ஓகஸ்ட் 2 முதல் அரச சேவை முழுமையாக வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதிய...
ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - நாடாளுமன...
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாள் இன்று - உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் நினைவுகூரல்!