உரும்பிராயில் நாளை விடுதலை வித்துக்கள் தினம் அனுஷ்டிப்பு – ஈ.பி.டி.பி ஏற்பாடு!
Monday, June 4th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் நாளையதினம் ஈழப் போராட்டத்தில் மரணத்த கட்சியின் தோழர்களை நினைவுகூரும் விடுதலை வித்துக்கள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
தமிழ் இனத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் மாலை நான்கு மணிக்கு விடுதலை வித்துக்கள் தினம் நடைபெறவுள்ளது.
இதில் ஈழப்போராட்டத்தில் மரணித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை நினைவுகூரி அஞ்சலிமரியாதையும் நினைவு உரைகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய - இலங்கை இடையிலான வர்த்தகத் தொழில்துறை அபிவிருத்தி அங்குரார்பணம்!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதம் - சர்வதேச ஊழல் ஒழ...
|
|
|


