மோட்டார் வாகன ஆணை­யா­ள­ருக்கு எதி­ராக விசா­ரணை!

Wednesday, August 10th, 2016

மோட்டார் வாகான ஆணை­யாளர் நாய­கத்­துக்கு எதி­ராக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் (எப்.சி.ஐ.டி.) சிறப்பு விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் தனது பதவிக் காலத்தின் போது நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் ஆரம் பிக்கப்பட்டுள்­ள­தாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் முதலாம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு தெரிவித்துள்ளார்.

பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறப்பு பீ அறிக்கை ஊடாக பொலிஸார் நேற்று நீதி­வா­னுக்கு தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகன ஆணை­யாளர் நாயகம், அரச சொத்­துக்­களை தவ­றான வழியில் பயன்­ப­டுத்தி, தனது பதவி நிலையை உப­யோ­கப்­ப­டுத்திக் கொண்டு மோசடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு பணம் சம்­பா­தித்­துள்­ள­தாக இணை­யத்­தளம் ஒன்றில் வெளி­யான அறிக்­கையின் பிர­காரம், குறித்த விடயம் தொடர்பில் விசா­ரணை செய்­யு­மாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் கடந்த 2015 டிசம்பர் 4 ஆம் திகதி நிதிக் குற்றப்புல­னாய்வுப் பிரிவில் முறைப்­பா­ட­ளித்­தி­ருந்தார்.

அந்த முறைப்­பாடு மீதான விசாரணைகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

Related posts: