அனல் மின்சாரத்திட்ட இரத்தானது முதலீட்டை பாதிக்காது – இந்திய அமைச்சர் நிர்மலா

Wednesday, September 28th, 2016

சம்பூர் அனல் மின் திட்டத்தை இரத்து செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு இலங்கையில் எதிர்கால இந்திய முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்தியாவின் வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதனை நிவர்த்திக்கும் வகையில் இந்தியா, 2 பில்லியன் அமரிக்க டொலர் முதலீட்டைமேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுடன்பேச்சுவார்த்தையை நடத்திய பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தமது பேச்சுவார்த்தையின் போது இந்திய இலங்கை பொருளாதார உடன்படிக்கையின் (எட்கா)அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை செய்தியாளர்களிடம் கருத்துரைத்த இலங்கையின் அமைச்சர் சமரவிக்கிரம, எட்காஉடன்படிக்கையின் மூலம் 1.25 பில்லியன் இந்திய மக்களுக்கு திறந்த சந்தைவசதி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

india

Related posts: