மே மாதம் மருத்துவர்கள் நியமனம் – போதனா வைத்தியசாலைபணிப்பாளர்!

Wednesday, April 19th, 2017

யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அடுத்த மாத­ம­ள­வில் புதி­தாக மருத்­து­வர்­கள் நியமிக்கப் படவுள்­ளனர். தற்­போது நில­வும் நெருக்­க­டியை சமா­ளிக்க அவர்­க­ளின் நிய­ம­னம் உத­வும் என்று  போதனா வைத்­தி­ய­சா­லை­யின் பணிப்­பா­ளர் மருத்­து­வர் சத்­தி­ய­மூர்த்தி தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு நாளாந்­தம் 800இற்­கும் மேற்­பட்­டோர் வெளி­நோ­யா­ர் பிரி­வில் சிகிச்சை பெறு­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு சிகிச்சை வழங்க 18 மருத்­து­வர்­கள்  கட­மை­யில் உள்­ள­னர்.  எனி­னும் நோயா­ளர் விடுதி­கள் சில­வற்­றுக்கு மருத்­து­வர்­கள் பற்­றாக்­குறை காணப்­ப­டு­ன்­.

இந்த நெருக்­கடி நிலமை அடுத்­த­மா­தம் புதி­தாக நிய­மிக்­கப்­ப­டும் மருத்­து­வர்­க­ளால் சீராக்­கப்­ப­டும்” என்று யாழ்ப்­பாண போதனா வைத்­தி­ய­சா­லை­யின் பணிப்­பா­ளர் மேலும் தெரி­வித்­தார்.

Related posts: