மேலும் 60 பொலிஸாருக்கு கொரோனா தொற்று – 1,500 பொலிஸார் தனிமைப்படுத்தலில் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Saturday, October 31st, 2020
நாட்டில் மேலும் 60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன் காரணமாக மேலும் 400 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள அஜித் ரோகண மேலும் ஆயிரத்து 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் நெருங்கியவர்கள் களுத்துறை பொலிஸ் கல்லூரி மற்றும் குண்டகசாலை பொலிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் வாங்கச் சென்ற உணவகக் கட்டுப்பாட்டாளர்கள் மூலம் இந்த வைரஸ் தொற்று பொலிஸாருக்குப் பரவியது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


