மேலும் 12 மாவட்ட மக்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
Tuesday, June 8th, 2021
12 மாவட்டங்களுக்கான Sinopharm தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதற்காக 450 ஆயிரம் தடுப்பூசிகளை 12 மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளதாகவும் கறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தடுப்பூசி திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படாத மாவட்டங்களுக்கே இந்த தடுப்பூகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம், கேகாலை, பதுளை, மொனராகலை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 12 மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்சிகளாக பதிவு செய்வதற்கு இம்முறை அதிக விண்ணப்பங்கள் கிடைக்கும் - தேர்தல் ஆணையாளர் !
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
ஒவ்வொரு மாகாணங்களுக்குமான பொலிஸ் அதிகாரப் பகிர்வின் பின்விளைவுகள் பாரதூரமானது - அமைச்சர் அலி சப்ரி ச...
|
|
|


