கட்சிகளாக பதிவு செய்வதற்கு இம்முறை அதிக விண்ணப்பங்கள் கிடைக்கும் – தேர்தல் ஆணையாளர் !

Wednesday, February 1st, 2017

அரசியல் கட்சியாக தம்மை பதிவு செய்யுமாறு ஏற்கனவே 400 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில், பதிவுக்கான அறிவிப்பு வெளியிட்டதும் சுமார் 5000 விண்ணப்பங்கள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறிய நாடு என்ற வகையில், இந்தளவு பெருந் தொகையான பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இருப்பது சிறந்ததில்லைனெ அவர் குறிபிட்டதுடன், ஆகக் குறைந்தது உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுடன், பதிவுக்குத் தேவையான ஆவணங்கள் இருந்தாலே பதிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். உள்ளுராட்சி தேர்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளை இராஜகிரியிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் திங்கட்கிழமை பிற்பகல் சந்தித்து பேசினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்சிகளை பதிவு செய்வது தொடர்பிலான  அறிவித்தலை விரைவில் வெளியிடவுள்ளேன். ஏற்கனவே, தம்மை அரசியல் கட்சியாக பதிவு செய்யுமாறு 400 விண்ணப்பங்கள் எமக்கு கிடைத்துள்ளன. அறிவித்தலையடுத்து விண்ணப்பங்களின் 5000மாக அதிகரிக்குமென எதிர்பார்க்கின்றேன். பிரதேசப் பெட்டி அமைக்கும் சங்கங்கள் கூட அரசியல் கட்சியாக பதிவு செய்ய முன்வந்துள்ளன. இவ்வாறு சிறிய சிறிய அமைப்புகள் கூட கட்சியாக பதிவு செய்யப்பட்டால் பெருமளவான அரசியல் கட்சிகள் நாட்டில் காணப்படும். தற்போது 64 கட்சிகள் பதிவு செய்யப்பட்டவையாக உள்ளமையே சிறிய நாட்டில் அதிகம். இந்த நிலையில் ஆயிரக்கணக்கில் கட்சிகள் இருப்பத நல்லதல்ல.

பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் தேசிய கட்சியாக 60உம் தமிழ்நாடு உட்பட ஏனைய மாநிலங்களில் உள்ளடங்களாக உம் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் எமது சிறிய நாட்டுக்கு பெருந்தொகை அரசியல் கட்சிகள் தேவையற்றது. எனவே, அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டுமாயின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஒரு மாகாண சபை உறுப்பினரைக் கொண்டிருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லையெனில் ஆகக் குறைந்தது 10 உள்ளுராட்சி உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் அவசியம்.

vd018

Related posts: