மூன்று மாத காலத்திற்குள் நிரந்தர தீர்வு – அமைச்சர் பாட்டலி சம்பிக்க!

Sunday, July 9th, 2017

கொழும்பில் கழிவுப் பொருள் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது. குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டிருப்பதாக மேல்மாகாண மற்றும் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டபடி கழிவுப் பொருட்களை வீசி எறியும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். என்றும் அமைச்சர் கூறினார்.கழிவுப் பொருள் பிரச்சினைக்கு எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நிரந்தர தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டதுடன் இதற்கு தடையை ஏற்படுத்தாது, கழிவுப் பொருள் முகாமைத்துவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் சகல தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அகற்றப்பட்ட கழிவுப் பொருட்களின் எடை மூவாயிரம் தொன்னுக்கும் மேற்பட்டதாகும். மீண்டும் கழிவுப் பொருட்கள் ஒன்றுசேராதிருப்பதற்கான தீர்வும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளாந்தம் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்காக வேலைத் திட்டமும் இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்; கூறினார்.

இதேபோன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் கொழும்பில் கழிவுப் பொருள் பிரச்சினைத் தீர்வுக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். கழிவுப் பொருட்கள் மூலம் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான மூன்று திட்டங்கள் எதிர்வரும் 14 மாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புத்தளம் அறுவக்காறு என்ற இடத்தில்  இயற்கை கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கழிவுப் பொருட்களை சேகரிப்பது தொடர்பிலான விடயங்களைக கணகாணிப்பதற்காக  கண்காணிப்பு விசேட நடவடிக்கை அலுவலகம் ஒன்று மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றம் அமைச்சில் அமைக்கப்பட்டிருப்பதாக இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பைசல் முஸ்தபா குறிப்பிட்டார். முப்படை, பொலிசார் ஆகியோரின் ஒத்துழைப்பு இதற்கு பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: