கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் முறைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021

கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் இலங்கையின் முறையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறானதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் தேவையான வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் முறையின் ஊடாக 100 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், அம்முறையானது வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அண்டை நாடான இந்தியாவைப் போல வீதிகளில் மக்களை இறக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. வீட்டில் சிகிச்சை பெற்ற ஒரு இலட்சம் பேரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் வைத்தியசாலை அமைப்பு சீர்குலைந்திருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: