மூத்த அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!
Tuesday, November 23rd, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலருக்கு கூண்டோடு இடமாற்ற உத்தரவு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போதைய யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன் வவுனியா பிரதேச செயலகத்திற்கும், மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன் முல்லை மாவட்டச் செயலகத்திற்கும், நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி கிழக்கு மாகாணசபைக்கும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கும் தற்போதைய வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி கோப்பாய் பிரதேச செயலகத்திற்கும் கோப்பாய் பிரதேச செயலாளராக பணியாற்றும்
சுபாஜினி மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளதோடு சங்கானை பிரதேச செயலாளர் கிருஸ்னவதனா மாவட்டச் செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


