முல்லைத்தீவு கடற்றொழிலாளர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

Sunday, August 12th, 2018

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது,

முல்லைத்தீவு கடற்பரப்பில் மீனவர்கள் தொடர்ச்சியாக அத்துமீறியும், தடைசெய்யப்பட்டதுமான தொழில் முறைகளினால் தமது தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்படும் அதேவேளை, தமது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் முழமையாக பாதிக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இக்கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் உரிய தீர்வு எட்டப்படாவிடின் தமது போராட்டம் தொடரும் என்றும் முன்னர் கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். இருந்த போதிலும் அமைச்சர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கெடுத்திருந்தனர்.

Related posts: