ரூபாவின் பெறுமதி ஸ்திரமான நிலையில் – நிதி அமைச்சர்

Thursday, June 16th, 2016

ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை மேற்கொள்ள போதியளவு பணம் உள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது. அந்நிய செலாவணி ஒதுக்கம் குறைவடையவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் பணம் வரவுள்ளது. நாட்டுக்கு வரும் ஒவ்வொரு சதமும் நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும். இதனிடையே, ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, தற்போது அமெரிக்க டொலரின் பெறுமதி 144 ரூபாவாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: