வவுனியாவில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் – வீடகள் தோறும் சுகாதார தரப்பினர் விழிப்புணர்வு!

Tuesday, July 20th, 2021

தற்போது பெய்துவரும் பரவலாக மழையுடனான காலநிலையை அடுத்து வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புக்கள் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் தமது இருப்பிடங்கள் வசிப்பிடப்பகுதிகளை சுத்தம் செய்து துப்பரவாக்கி டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அழிப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சுகாதார பகுதியினால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன .

தற்போது மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன. அதேவேளை வவுனியாவிலிருந்தும் பல்வேறு தேவைகளிற்காக மேல் மாகாணங்களுக்கு வேலையின் நிமித்தம் செல்பவர்கள் என பல்வேறு தேவைகளிற்காக சென்று வருபவர்கள் அவதானமாக செயற்படுமாறும் எச்சரித்துள்ள வவனியா சுகாதார பிரிவினர் கொரோனாவிற்கான அறிகுறிகள் டெங்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளுடன் ஒத்தவையாக காணப்படுகின்றது என்றுமு; அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே அண்மைய சில தினங்களாக வவுனியாவில் பரவலாக மழையுடனான கால நிலை அதிகரித்து செல்கின்றன . இதனால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் பொதுமக்கள் தமது இருப்பிடங்கள் சுத்தம் செய்து துப்பரவாக்கி வைப்பதுடன் டெங்கு நுளம்பு குழம்பிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் தமது ஒத்துழைப்புக்களை வழங்குமாறு சுகாதார பிரிவினரால் வீடுகளுக்கு சென்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: