முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மத்திய அரசால் நேரடியாக செயற்படுத்தப்படுவதால் மாகாணத்தின் இருக்கின்ற அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றது – றெமீடியஸ்!

Tuesday, March 12th, 2019

தமிழ் மக்களுக்கு உரிமை வேண்டும் அதிகாரங்கள் வேண்டும் என நாளாந்தம் அறிக்கையிடும் தமிழ் அரசியல் தரப்பினர் வடக்கு மாகாண சபையின் அதிகார எல்லைக்குள் காணப்படும் செயற்றிட்டங்களைக் கூட அந்த சபையிடம் கொடுக்காது தாமாகவே நேரடியாக செயற்படுத்துவதால் எமது மாகாணசபையின் அதிகாரங்கள்  நாளாந்தம் பறிக்கப்படுவதாகவே காணப்படுகின்றது.

இந்த நடைமுறைகளுக்கு நாம் ஒத்துழைத்து சென்றோமேயானால் எமது வடக்கு மாகாணசபைக்கு இருக்கின்ற அதிகாரங்களும் இழக்கப்படும் நிலை ஏற்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் தெரிவித்துள்ளார். 

யாழ்.மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது தமிழ் சொற்கள் பாவனையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது அவை மாகாணசபை மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு  ஊடாகவே செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் இதுவே சபையின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.

கடந்த காலங்களில் நாம் அதிகாரத்தில் இருந்தபோது உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி மாகாணசபையின் ஊடாகவே செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.

எமது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு அபிவிருத்தியை மத்திய அமைச்சு எமது அனுமதி இன்றி செயற்படுத்துவதானது எமது ஆளுகைக்கு அவமானமாக அமைவதுடன் எமக்கான அதிகாரங்களும் பறிக்கப்படுவதாகவே காணப்படுகின்றது.

எனவே எந்த திட்டங்களானாலும் அவை மாகாணசபையூடாக உள்ளூராட்சி மன்றங்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில்  27 இளைஞர்க...
தீப்பற்றிய கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை - கடல்சார் சூழல் பாதுகாப்பு...
இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியா எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை - வெளிவிவகார அமைச்சர் ஜ...