வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதை இனி மேற்கொள்ள முடியாது – அரச அச்சக அதிகாரி கங்கானி கங்கானி லியனகே தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதை இனி மேற்கொள்ள முடியாது என அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்கும்வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்துக்கு கங்கானி லியனகே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் –  வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பதன் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக குற்றம்சுமத்தியுள்ளார்.

தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளில் ஒரு பகுதியை அச்சிட்டு தேர்தல் ஆணையகத்திற்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்த அரச அச்சக அதிகாரி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கான வாய்ப்பைப் பறிக்கும் பின்னணியை உருவாக்கினார் என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: