முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் – இறக்குமதிக்கு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!
Tuesday, August 6th, 2024
முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
தான்தோன்றித்தனமான அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் மத்தலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதன் காரணமாக முட்டைகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசாங்கம் நிவாரணங்களை வழங்கும் பட்சத்தில் முட்டைகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அவுஸ்திரேலியாவில் இருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
சீரற்ற காலநிலை: 87364 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
|
|
|


