சீரற்ற காலநிலை: 87364 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

Tuesday, December 17th, 2019


இந்த ஆண்டு டெங்கு நோயாளர்கள் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய இந்த ஆண்டு 87364 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 90பேர் இறந்துள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் .கொழும்பு மாவட்டத்தில் இருந்து 17940 டெங்கு நோயாளர்களும் கம்பாஹா மாவட்டத்திலிருந்து 13718 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணம் தவிர்த்து மத்திய, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டியில் 7698 நோயாளர்களும், காலியில் 6497 நோயாளர்களும் , யாழ்ப்பாணத்தில் 6267 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் டெங்கு நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட நான்காயிரம் நோயாளர்களே பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில் , இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் இருப்பதாக சுகாதார புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: