இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பின் இரா செல்வவடிவேல்!

Thursday, November 29th, 2018

தற்போதைய காலநிலை மாற்றங்களால் வடபகுதி குறிப்பாக யாழ் மாவட்டம் இயற்கை அனர்த்தங்களின் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகமான இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அந்தவகையில் எமது பிரதேசத்ததை இயற்பை அனர்த்தங்களிலிருந்து எமது மக்களையும் பிரதேசங்களையும் பாதுகாக்க நாம் திட்டங்களை உருவாக்கி அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா. செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாநகரின் புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் இன்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –

குறிப்பாக அண்மைய ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது யாழ் மாவட்டத்தின் காங்கேசன்துறையை அண்டிய பகுதியை அண்மித்ததாக பல தாழமுக்கங்கள் உருவாகியிருப்பதை காணமுடிகின்றது.

இந்நிலைமைகளால் வடபகுதியில் குறிப்பாக எமது யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இதன் தாக்கங்கள் உணரப்பட்டுள்ளன.

அந்தவகையில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள இத்தகைய இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காக தயார்ப்படுத்தல்களுடன் அதற்கான விஷேட மீட்பு அணியொன்றையும் உருவாக்கிக்கொள்ள நாம் இந்த வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்துகொள்ள வேண்டும் என்றார்.

Related posts: