ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்தும் அனுசரணை – வடக்கில் 54 ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன!

Friday, October 21st, 2022

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம், ஹலோ ட்ரஸ்ட் அறக்கட்டளைக்கு மொத்தம் 647,887 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி மற்றும் ஹலோ அறக்கட்டளையின் திட்ட மேலாளர் ஸ்டீபன் ஹோல் ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.

ஹலோ அறக்கட்டளை, 2002 இல் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், ஜப்பானிய உதவியின் மூலம் ஏறத்தாழ 20% அனுமதி நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பகுதியில் ஜப்பான் பெரும் நன்கொடை அளிப்பதுடன், தற்போது இலங்கையில் இயங்கி வரும் கண்ணிவெடி அகற்றும் நான்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் உதவுகின்றது.

42.7 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் இந்த நோக்கத்திற்காக ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான இருபது வருட மனிதாபிமான உதவியின் விளைவாக சுமார் ஏழு சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் இருந்து 54,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: