வீட்டுப் பணியாளர்களாக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தான் எதிர்ப்பு – ஜனாதிபதி!

Sunday, March 10th, 2019

பெண்களை வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதற்கு தான் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறித்த பணிப்பெண்கள் நாட்டுக்கு ஈட்டித் தரும் நிதியின் மூலமே முதலாளித்துவ வர்க்கத்தினரும், சொகுசு வாகனங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகளும், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் சுகபோகங்களை அனுபவிக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கான பணிப்பெண் தொழில்வாய்ப்பானது, நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பிரதான மார்க்கமாக இருந்தபோதும், அதில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள், சகோதரிகள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கதைகள் சோகம் நிறைந்தவையாகும்.

எனவே, பெண்களை வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதற்கு தனிப்பட்ட முறையில் தான் எதிரானவர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2019 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரகடனம் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: