தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 7 ஆயிரம் பேர் மீது வழக்குத் தாக்கல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவிப்பு!
Friday, July 23rd, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றத்திற்காக 7 ஆயிரம் பேர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதிமுதல் இதுவரை 51 ஆயிரத்து 733 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் 7 ஆயிரம் பேர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை!
கட்டணங்களை குறையாது - முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் !
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வே...
|
|
|
நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!
யாழ் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் - அரச அதிபர் அத...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் - 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்க...


