நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Tuesday, July 13th, 2021

நாட்டில் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான 24 நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே நாட்டில் டெல்டா வைரஸ் பிறழ்வு பரவியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் 96 உயிரி மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இந்த மாதிரிகள் எழுமாறாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளின் முடிவுகளை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: