முகமாலை பகுதியில் குண்டு வெடிப்பு! ஒருவர் பலி!!

Monday, August 15th, 2016

முகமாலையில் இடம்பெற்ற இருவேறு வெடிப்பு சம்பவங்களில் ஒரு உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க கண்ணிவெடி உள்ள பிரதேசத்திற்குள் கடந்த 12ஆம் திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பத்திநாதன் சுதாகரன் என்பவர் உயிரிழந்த நிலையில் நேற்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்ணிவெடி அகற்றப்படாத ஆபத்து மிக்க குறித்த பிரதேசத்திற்குள் சென்று வெடிப்பொருட்களை எடுத்து, அதன் மருந்தை விற்பனை செய்யும் நோக்கில் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபர் உயிரிழந்த பகுதிக்கு டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு 29 வரையான ரங்கன் ரக கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது சடலத்திற்கு அருகில் 15 வரையான கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை காணவில்லை என அவரது மனைவி நேற்றுமுன்தினம் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை முகமாலை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற மற்றுமொரு வெடிப்பு சம்பவத்தில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 45 வயதான கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த எஸ். மகேஸ்வரி என்பவரே இவ்வாறு படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த பெண்ணின் ஒரு கண் பார்வை முற்றாக இழந்துள்ள அதேவேளை, ஒரு கண் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

Related posts:

வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி - பட...
குருந்தி விகாரைக்குரிய அரச காணி வெளித்தரப்பினருக்கு வழங்கப்படமாட்டாது ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆ...