முகக்கவசங்களுக்கான விலைகள் நிர்ணயம் – சுகாதார அமைச்சு!

Thursday, January 30th, 2020

நோய் தொற்றுக்களை தடுப்பதற்காக அணியப்படும் முகக்கவசங்களுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன்படி அழித்துவிடக்கூடிய முகக்கவசங்கள் 15ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

அதேநேரம் என் 95 முகக்கவசம் 150 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனை மீறுவோர் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முகமாக முகக்கவசங்களை அணியவேண்டும் என்று சுகாதார அமைச்சு ஏற்கனவே பொதுமக்களிடம் அறிவுறுத்தியிருந்தது.

இதனை பயன்படுத்தி வியாபாரிகள் முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டமையை அடுத்தே அதற்கான நிர்ணய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வோரை முற்றுகை இடுவதற்கு நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எந்தவொரு மருந்தகம் அல்லது விற்பனை நிலையங்களில் இவ்வாறு கூடுதலான விலைக்கு இவை விற்பனை செய்யப்படுமாயின் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அதிகார சபை தீர்மானித்துள்ளது.

கூடுதலான விலைக்கு முக கவசம் விற்பனை செய்யப்படுவதாக பலர் முறையிட்டிருப்பதாகவும் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பௌஷி தெரிவித்துள்ளார்.

Related posts: