புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது!

Saturday, March 4th, 2017

புதுக்குடியிருப்பில் இராணுவத்தினர் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணியில் 7.5 ஏக்கர் காணி முதற்கட்டமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதீபன் ஆகியோர் இன்று குறித்த காணிகளை இராணுவத்திடமிருந்து பொறுப்பேற்று பொதுமக்களிடம் வழங்கியுள்ளனர்..

புதுக்குடியிருப்பில் 682ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 19 பேரினுடைய 7.75 ஏக்கர் காணி இரண்டு வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும், மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என்றும், பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் இதன்படி போராட்டத்தைக் கைவிடுமாறும் கடந்த வாரம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு புதுக்குடியிருப்பு மக்கள் உடன்படாத நிலையில் 7.5 ஏக்கர் காணி இடங்களை விடும் பட்சத்திலேயே, தாம் போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் தெரிவித்திருந்த நிலையில் இன்று காணிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து போராட்டமும் கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts:


மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசுக்கு உரிமை உண்டு - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
பயணத் தடை நீக்கப்பட்டதன் பின்னரும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ...
கொரோனாத் தொற்றினால் இதுவரை 67 சிறுவர்கள் உயிரிழப்பு - ஒரு மாதத்திற்கும் குறைவான 17 சிசுக்களும் பலி எ...