மீன் ஏற்றுமதியில் வளர்ச்சி  – கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு!

Thursday, January 25th, 2018

ஐரோப்பிய ஒன்றியம் மீன்களை இறக்குமதி செய்வதற்கான தடையை அகற்றியதன் பின்னர் இலங்கையில் இவ்வருடம் மீன் ஏற்றுமதி 45.9 வீத கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி ஆரம்பிக்கப்பட்டதுடன்இவ்வருட இறுதியில் அதில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 18 ஆயிரத்து 260 மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதே வேளை பண்டிகைக்காலத்தில் நுகர்வோனுக்கு நிவாரணவிலையில் புதிய மீன்களையும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களையும் வழங்குவதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை ஊக்குவிப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.இதன் பிரகாரம் வாதுவ மீன் விற்பனை நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டது.

Related posts:

போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு மக்கள் ஆதரவு வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்ட...
நாட்டைக் கட்டியெழுப்ப அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – தேசிய வீடமைப்பு அதிகார சபையின் த...
இலங்கை திறந்த அரச கூட்டிணைவு தேசிய செயல் திட்டம் தொடர்பில் மக்கள் கருத்தறிய எதிர்பார்ப்பு!