மீண்டும் 02 மாத கால அவகாசம்!
 Sunday, April 22nd, 2018
        
                    Sunday, April 22nd, 2018
            
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது 20ஆம் திகதியுடன் முதல் கட்டாய நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 02 மாத கால சலுகை வழங்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்,
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவதை ஊக்கப்படுத்துவதற்கே இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த தீர்மானத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கொழும்புக்கு வௌிப்பிரதேசங்களில் உள்ள முச்சக்ககர வண்டி சாரதிகளும் கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவதற்கு வசதியாக மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்குவதாக அவர் சிசிர கோதாகொட கூறினார்
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        