போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் !
Saturday, June 18th, 2022
போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் மெட்டா, கூகுள், டுவிட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி, போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
000
Related posts:
குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தை பொறுப்புணர்வுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வ...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிப்பு!
விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் ...
|
|
|
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக நாணயக் கடிதத்தை விடுவிக்கத் தீர்மானம் - சுகாதார அமைச்சர் சன்ன ஜ...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை - பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் புதிய முதலீடு...
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே சிறந்தது - பொது பாது...


