பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே சிறந்தது – பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவிப்பு!.

Thursday, February 22nd, 2024

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே தமது விருப்பம் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 26ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள பதில் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மற்றும் நிரந்தர பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்றும் அதில் பிரச்சனை இல்லை. அரச தரப்பில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அரசியல் நிர்ணய சபை வித்தியாசமாக வேலை செய்கிறார்கள் என்றும் மக்கள் அனைவரும் அனுமதித்தால் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: