குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தை பொறுப்புணர்வுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!

Sunday, July 25th, 2021

சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் என எப்படி அழைத்தாலும் அனைத்தும் சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளே என சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே அவற்றை எதிர்ப்பது பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் பொறுப்பு என்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தினை பொறுப்புணர்வுடனும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

அத்துடன் சிறுவர் துஸ்பிரயோகத்தினை வெறுமனே எதிர்ப்பதற்கு அப்பால் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமொன்று அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தினை பொறுப்புணர்வுடனும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் குறித்த செய்திகளை அடிக்கடி கடந்தகாலங்களில் வாசித்திருக்கின்றோம் செவிமடுத்திருக்கின்றோம், ஆனால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர சிறுவர்கள் மீண்டும் அந்த துயரத்திற்குள் சிக்குவததை தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான திட்டமிட்ட கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் போன்றவை சிறுவர்கள் நீண்டகால உளவியல் பாதிப்பு மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக சமூகம் செயல்இழக்கும் நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: