எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் அவசியம் – நிரோஷன் திக்வெல்லவுக்கு தெரிவுக் குழுத் தலைவ உப்புல் தரங்க அறிவுறுத்து!

Tuesday, March 5th, 2024

கிரிக்கெட் அரங்கில் எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை மனதில் கொள்ளுமாறு நிரோஷன் திக்வெல்லவுக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவ உப்புல் தரங்க அறிவுறுத்தியுள்ளார்.

உப்புல் தரங்க தலைமையிலான தெரிவுக் குழுவினர் கிரிக்கெட் தலைமையகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஊடக சந்திப்பில் நிரோஷன் திக்வெல்லவின் ஒழுக்கம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உப்புல் தரங்க,

‘கிரிக்கெட் அரங்கில் எவ்வளவுதான் பிரகாசித்தாலும் ஓழுக்கம் கடைப்பிடிக்கப்படுவது அவசியம் என திக்வெல்லவுக்கு நாங்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளோம்.

இது வனிந்து ஹசரங்கவுக்கும் பொருந்தும். வனிந்து ஹசரங்க இரண்டு போட்டித் தடையுடன் தப்பித்துக்கொண்டது பெரிய விடயம்.

எனவே வருங்காலத்தில் ஹசரங்க பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.

இதேவேளை, குசல் ஜனித் பெரேரா சுகவீனமுற்றதாலேயே நிரோஷன் திக்வெல்லவை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

‘நிரோஷன் திக்வெல்ல ஒரு பதில் வீரர் மாத்திரமே. குசல் ஜனித் பெரேரா சுகவீனமுற்றதாலேயே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டோம். ஆரம்பத் துடுப்பாட்டத்தில் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: