உலக கோப்பை கால்பந்து: முடிசூடியது பிரான்ஸ் !

Sunday, July 15th, 2018

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

ரஷ்யாவில் நடைபெற்ற 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

போட்டியின் 18வது நிமிடத்தில் பிரீகிக் வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மான் அடித்த பந்தை தடுக்க முற்பட்ட குரோஷியா வீரர் மான்ஸ்சுகிக் தலையில் பட்டு ‘சேம் சைடு’ கோலானது. தொடர்ந்து 28வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் அட்டகாச கோல் அடிக்க போட்டி சமனானது.

38வது நிமிடத்தில் கோல் ஏரியாவுக்குள் வைத்து குரோஷிய வீரர் கையில் பந்து பட்டதால் பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் லாவகமாக வலைக்குள் பந்தை தள்ளிய கிரீஸ்மான் தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2 – 1 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் பிரான்ஸ் வீரர்கள் அசத்தினர். 59வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பவுல் போக்பா கோல் அடித்தார். 65வது நிமிடத்தில் மபபே கோல் அடிக்க 4 – 1 என வலுவான முன்னிலை பெற்றது.

69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் தவறால் குரோஷியாவின் மான்ட்சுகிச் கோல் அடித்து போட்டியில் விறுவிறுப்பை ஏற்றினார். இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. முடிவில் 4 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

Related posts: