இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை சடுதியா உயர்வு – சுகாதார அமைச்ச தகவல்!

Sunday, June 14th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 4 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்று செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் கட்டாரில் இருந்தும் ஒருவர் சென்னையில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட மற்றுமொருவர் கடற்படை சிப்பாய் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 622 பேர், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 56 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை ஆயிரத்து 252 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, நாட்டில் மேலும் 22 கடற்படையினர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 679 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய 149 மாணவர்கள் முப்படையினரால் ராஜகிரிய, ஆயர்வேத கட்டிடதொகுதியில் முன்னெடுத்து செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து நேற்று அங்கிருந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நெடுந்தீவு பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
பிலியந்தளை தாக்குதல் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்கா பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு...
வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உயிரிழப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவி...