குற்றவாளிகளை சிறையில் அடைப்பதனால் குற்றச்செயல்களை தடுக்க முடியாது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, December 24th, 2021

குற்றவாளிகளை சிறையில் அடைப்பதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

குற்றவாளிகளை வகைப்படுத்த வேண்டும், தடுப்புக் காவலில் வைப்பதனாலோ அல்லது சிறையில் அடைப்பதனாலோ குற்றச் செயல்களை தடுக்க முடியாது.

குறிப்பாக போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களின் போது, போதைப் பொருள் கொண்டு வரும் சர்வதேச வர்த்தகர்கள், அவற்றை இலங்கையில் விநியோகம் செய்வோர், சமூகத்திற்குள் விநியோகம் செய்வோர், போதைப் பொருள் பயன்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என பல்வேறு தரப்பினரையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

போதைப் பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

போதைப் பொருள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்தின் அறிக்கை கிடைக்கப் பெற எட்டு மாதங்கள் தேவைப்பட்டது. தற்பொழுது அது ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கிடைக்கப் பெறுவதன் மூலம் துரித கதியில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts:

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி - இலங்கையை பாராட்டியது உலக சுகாதார ஸ்தாபனம்!
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட்டின் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலரை சே...
எரிவாயுவுடன் கூடிய கப்பல் இலங்கை வந்தடைந்தது - நாளைமுதல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் - லிட்...