அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுங்கள் – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Friday, December 10th, 2021

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயலூக்கி தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு வாரங்களில் செலுத்தி நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கொவிட்-19 பரவல் தடுப்புக் குழு கூட்டத்தின் போதே துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இவ்’வாறு பணித்துள்ளார்.

இதனடிப்படையில் இரண்டாம் தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதங்கள் கடந்த சகலருக்கும் செயலூக்கியை செலுத்த முடியும் என இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தடுப்பூசிகள் செலுத்தப்படும் எந்தவொரு நிலையத்திலும் செயலூக்கி தடுப்பூசியை நாளைமுதல் நாளாந்தம் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்துடன்  செயலூக்கியாக பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்காக தற்போது சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசியை அட்டையைக் கட்டாயமாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: