மீண்டும் கராச்சிக்கான விமான சேவை ஆரம்பம்!

Saturday, June 1st, 2019

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கவிருக்கிறது.  

இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான சேவை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறுகின்றன. செவ்வாய் வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கான பல்வேறு விமான சேவைகள் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமான இடை நிறுத்தப்பட்டன.

இடைநிறுத்தப்பட்ட சேவை மீண்டும் இன்று ஆரம்பமாகிறது. ஸ்ரீலங்கன் விமான சேவை ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களுக்கு விமான சேவையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததும் 70 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் - தேர்தல் ஆணைக் குழுவின் பணிப்ப...
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் நாட்டின் அனைத்து 44 பொலிஸ் பிரிவுகளுக்கும் பிரதிப் பொலிஸ்...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகைகள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்த...