அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகைகள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை வெளியீடு!

Thursday, February 9th, 2023

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமல்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYEE Tax) விதிக்கப்படும் தொகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர்களுக்கு பணமல்லா சலுகைகளாக வழங்கப்படும் வாகனம், எரிபொருள் கொடுப்பனவு, வீடு, மருத்துவ வசதிகள் போன்றவற்றுக்கு இந்த வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களிடம் இருந்து வீட்டுக்காக அறவிடப்படும் மொத்த சம்பளத்தில் 20,000 ரூபா அல்லது 12.5 வீதமாக கருதப்பட்ட தொகை, அடிப்படை சம்பளத்தில் 12 வீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது

Related posts: