வாகன விபத்துக்கள் இவ்வாண்டு அதிகம் – சுகாதார அமைச்சு!

Sunday, December 30th, 2018

வருடாந்தம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வாகன விபத்து மற்றும் பட்டாசு கொளுத்துவதினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து செல்வதாக சுகாதார அமைச்சின் வாகன விபத்து தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒவ்வொரு வருடமும் வாகன விபத்துக்களால் சுமார் 3000 பேர் வரையில் உயிரிழக்கின்றனர்.

ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருமுறை, விபத்துக்களினால் இருவர் வீதம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மதுபோதையிலும், தூக்க கலக்கத்திலும் வாகனம் செலுத்துதல், மனஅழுத்தம், வீதி விதிகளை கருத்திற்கொள்ளாமல் வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களினாலேயே அதிகளவில் வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

இதேநேரம், பண்டிகை காலங்களில் வாகன விபத்துக்கள் இடம்பெறும் விகிதம் அதிகரிக்கின்றது.

பட்டாசுக்கள் கொளுத்தும் போது அதிகளவில் சிறுவர்களே விபத்துக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் வாகன விபத்து தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: