தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி நாளை வெளியீடு!
Sunday, June 21st, 2020
சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியாகவுள்ளது.
குறித்த வர்த்தமானி நாளை 22 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என ஜூன் மாதம் 25 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்முறை தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்கு 70 கணனிகளைத் தருகிறது கொரியா!
வாகன விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு - பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவிப்பு!
பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக வெளியானது தகவல்!
|
|
|


